உலன் உடே,
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம், மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.
இதில் அரையிறுதியில் துருக்கியின் பஸ்னாஸ் சகிரோக்லுவுடன் மோதிய மேரி கோம் தோல்வியுற்றதால் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. எனினும், மேரி கோம் தோல்வியுற்றதாக கூறிய நடுவரின் முடிவு சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, நடுவரின் முடிவுக்கு எதிராக இந்தியா மேல் முறையீடு செய்தது. ஆனால், இந்தியாவின் மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டது.