image courtesy:PTI 
பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை

மற்றொரு இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

தினத்தந்தி

லிவர்பூல்,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான 80 கிலோவுக்கு மேலான பிரிவில் நேரடியாக காலிறுதியில் களமிறங்கிய இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஒல்டினோ சோடிம்போவாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் குறைந்தது வெண்கலப்பதக்கத்தை அவர் உறுதி செய்தார்.

இதில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் (51 கிலோ) துருக்கியின் ககிரோக்லு புஸ் நாசிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

முன்னதாக ஆண்கள் பிரிவில் ஜதுமணி சிங் (48 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் வெற்றி பெற்று காலிறுதியை எட்டினர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா