பிற விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப், ஆசியன் போட்டிகளில் இருந்து விலக முடிவு; மேரி கோம் அறிவிப்பு

6 முறை உலக சாம்பியனான மேரி கோம் மகளிர் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசியன் போட்டிகளில் இருந்து விலகும் முடிவை அறிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 6ந்தேதி தொடங்கி 21ந்தேதி வரை நடைபெறுகிறது. இதேபோன்று, காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28ந்தேதியும், ஆசிய போட்டிகள் செப்டம்பர் 10ந்தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான அனைத்து 12 பிரிவுகளுக்கான வீரர்களை தேர்வு செய்தல் வருகிற திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறுகிறது. ஆசிய போட்டிகளுக்கான தேர்வும் இதில் நடைபெறுகிறது. எனினும், ஆசிய போட்டிகளுக்கான 51 கிலோ மற்றும் 69 கிலோ எடை பிரிவுக்கான தேர்வு வருகிற 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தனியாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சர்வதேச அளவிலான போட்டிகளில் பல முறை வெற்றிகளை ருசித்துள்ள, 6 முறை உலக சாம்பியனான மேரி கோம் மகளிர் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசியன் போட்டிகளில் இருந்து விலக முடிவு செய்து உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, புதிய குத்து சண்டை வீரர்களுக்கு வழிவிடும் வகையிலும், காமன்வெல்த் போட்டிகளுக்கு தயாராவதில் கவனம் செலுத்தவும் உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு