பிற விளையாட்டு

உலக கோப்பை கூடைப்பந்து: ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

உலக கோப்பை கூடைப்பந்து போட்டியில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

தினத்தந்தி

ஷாங்காய்,

18-வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி 82-70 என்ற புள்ளி கணக்கில் செக்குடியரசு அணியை வீழ்த்தி முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, நடப்பு சாம்பியன் அமெரிக்காவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 89-79 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா-பிரான்ஸ், ஸ்பெயின்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது