பிற விளையாட்டு

உலகக் கோப்பை செஸ்: இந்திய வீரர் அதிர்ச்சி தோல்வி

இந்திய கிராண்ட்மாஸ்டர் விதித், சாம் ஷங்லாண்டை (அமெரிக்கா) சந்தித்தார்.

தினத்தந்தி

கோவா,

பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராதி 3-வது சுற்றில், சாம் ஷங்லாண்டை (அமெரிக்கா) சந்தித்தார். முதல் இரு ஆட்டங்கள் சமன் ஆன நிலையில் ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது.

இதில் குஜராதி 2-3 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். மற்றொரு இந்திய வீரர் எஸ்.எல்.நாராயணன், சீனாவின் யாங்யி யுவுடன் தோற்று நடையை கட்டினார். கார்த்திக் வெங்கட்ராமன், ருமேனியாவின் போக்டான் டேனியலை வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார். பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணன், பிரணவ் ஆகிய இந்தியர்களும் 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து