பிற விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 2021ம் ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 19ந்தேதி தொடங்கி டெல்லியில் நடந்து வருகிறது. வருகிற 29ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டி இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியாகும்.

இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஈரான், தாய்லாந்து, துருக்கி, கொரியா, சிங்கப்பூர் மற்றும் அங்கேரி உள்ளிட்ட 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியை நடத்தும் இந்தியா சார்பில் 57 பேர் கொண்ட வலுவான அணி களம் இறங்கியுள்ளது. தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை குவித்து வருகிறது.

இதில், இன்று நடந்த 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. மனு பேக்கர், ரஹி சர்னோபாத் மற்றும் சிங்கி யாதவ் ஆகியோர் கொண்ட இந்திய அணியானது போலந்து அணியை 17-7 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றியை பெற்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு