கோப்புப்படம் 
பிற விளையாட்டு

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீராங்கனையின் உலக சாதனையை முறியடித்த சீன வீராங்கனை...!!

இந்திய வீராங்கனை மீராபாய் சானுவின் உலக சாதனையை சீன வீராங்கனை ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்தார்.

தினத்தந்தி

ரியாத்,

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இந்த மாதம்  4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பெண்களுக்கான 49 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 120 கிலோ எடையை தூக்கி சீன வீராங்கனையான ஜியாங் ஹுய்ஹுவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இதே பிரிவில் இந்திய வீராங்கனை மீராபய் சானு, 2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில், 119 கிலோ தூக்கியதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்து சீன வீராங்கனை புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சீனாவின் மற்றொரு வீராங்கனையான ஹூ ஜிஹுய் ஸ்னாட்ச் பிரிவிலும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் (95 கிலோ +120 கிலோ) 215 கிலோ எடையை தூக்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இது முந்தைய சாதனையை (213 கிலோ) விட இரண்டு கிலோ அதிகமாகும்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்