இஸ்ரேல்,
இஸ்ரேலைச் சேர்ந்த இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லினாய் ஆஷ்ரம், திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். தற்போது அவருக்கு 22 வயது மட்டுமே ஆகிறது.
இந்த திடீர் ஓய்வு முடிவுக்கான காரணம் குறித்து அவர் கூறும்போது, ஜிம்னாஸ்டிக்கில் தன்னுடைய கனவு நிறைவேறிவிட்டதாக கூறினார். மேலும், பயிற்சியாளர் பணியை தொடர இருப்பதாகவும் கூறி உள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், ரிதமிக் ஜிம்னாஸ்டிக்கில், லினாய் ஆஷ்ரம் தங்கப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.