செண்ட் பீட்டர்ஸ்பர்க்
ஊக்க மருந்து தொடர்பாக மேலும் கேள்வி கேட்காமல் இருக்க நான் ஒரு நடனம் ஆடுகிறேன் என்று கிண்டலாக பதில் கொடுத்தார்.
அதே சமயம் அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த உலக கால்பந்து அமைப்பான ஃபிபாபின் தலைவர் இன்ஃபாண்டினோ ரஷ்ய வீரர்கள் தொடர்ச்சியாக பல சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று வருகின்றனர். ஆனால் எவரும் ஊக்க மருந்து சோதனைகளில் தோல்வி அடையவில்லை என்றார் அவர்.
எனினும் கனடா நாட்டின் விளையாட்டுத் துறையைச் சார்ந்த ரிசர்ட் மெலாரென் எனும் வழக்கறிஞர் 1,000 ற்கும் மேற்பட்ட ரஷ்ய விளையாட்டு வீரர்கள் பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகவும் இவர்களுக்கு ஊக்க மருந்து சோதனைகளில் வெற்றி பெற ரஷ்ய உளவுத்துறை உதவுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பு மெலாரென்னிடம் இது பற்றி அறிக்கை அளிக்கும்படி கோரியிருந்தது.
கால்பந்து உட்பட 30 விளையாட்டுகள் இந்த சோதனையில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. ரஷ்ய வீரர்கள் ஊக்க மருந்தை காட்டிக்கொடுக்காத பாட்டில்கள் உட்பட பல விதங்களில் சோதனையை வெற்றிகரமாக கடந்து விடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ரஷ்ய கால்பந்து ஒன்றியத்தின் தலைவரான முட்கோவிடம் தொடர்ந்து செய்தியாளர்கள் ஒன்பது நிமிடங்களுக்கு கேள்விகள் எழுப்பியதால் கோபமடைந்த அவர் நான் வேண்டுமானால் ஒரு நடனமாடி காட்டுகிறேன்; ஆனால் நீங்கள் இது தொடர்பான கேள்விகளை கேட்கக்கூடாது என்று கிண்டலாக கூறினார்.
ரஷ்யா அடுத்த ஆண்டு உலகக்கோப்பையை நடத்தவுள்ளது. நாங்கள் ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளோம். ஊக்க மருந்தைப் பயன்படுத்தி வெறும் வெண்கல பதக்கத்தை மட்டும் வெல்வது எங்கள் விருப்பமில்லை என்றார் அவர். பல போட்டித் தொடர்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரஷ்ய வீரர்கள் எவரும் குற்றமிழைத்ததாக கண்டறியப்படவில்லை என்றார் இன்ஃபாண்டினோ. அச்சோதனைகள் ரஷ்யாவிலும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஊக்க மருந்து பயனபடுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார்.