விளையாட்டு

ரஷிய மல்யுத்த போட்டி: பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்

ரஷிய மல்யுத்த போட்டியில், பஜ்ரங் பூனியா தங்க பதக்கம் வென்றார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அலி அலியேவ் சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் காஸ்பிஸ்க் நகரில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் களம் கண்ட நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பஜ்ரங் பூனியா இறுதி சுற்றில் விக்டோர் ரசாடினை (ரஷியா) எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் தடுமாறிய பூனியா 0-5 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கினார். அதன் பிறகு சுதாரித்து சரிவில் இருந்து மீண்ட அவர் 13-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். 23 வயதான பூனியா சமீபத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்