விளையாட்டு

மாநில ஆக்கி போட்டி: மதுரை அணி முதலிடம்

மாநில ஆக்கி போட்டியில் மதுரை அணி முதலிடம் பிடித்தது.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. ஆண்கள் பிரிவில் நாக்-அவுட் சுற்று நிறைவில் சென்னை, மதுரை, அரியலூர், தூத்துக்குடி மாவட்ட அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. இதில் நேற்று காலை நடந்த ஒரு ஆட்டத்தில் சென்னை அணி 4-3 என்ற கோல் கணக்கில் அரியலூரை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு ஆட்டத்தில் மதுரை அணி 3-2 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடியை வென்றது.

பின்னர் மாலையில் நடந்த தூத்துக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தாலே முதலிடத்தை பிடிக்கலாம் என்ற நிலையில் ஆடிய சென்னை அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. மதுரை அணி தன்னை எதிர்த்த அரியலூரை 5-2 என்ற கோல் கணக்கில் விரட்டியது. சூப்பர் லீக் முடிவில் மதுரை, சென்னை அணிகள் தலா 2 வெற்றி, 1 தோல்வியுடன் சமநிலை வகித்தது. கோல் வித்தியாசம் அடிப்படையில் மதுரை அணி முதலிடத்தை தட்டிச்சென்றது. சென்னை அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...