விளையாட்டு

இந்திய வீராங்கனை தேஜஸ்வினி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய வீராங்கனை தேஜஸ்வினி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.

தினத்தந்தி

தோகா,

14-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவாந்த் தகுதி சுற்றில் 1,171 புள்ளிகள் குவித்து 5-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 8 பேரில் 5 வீராங்கனைகள் ஏற்கனவே அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டதால், தேஜஸ்வினி சவாந்த் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் தேஜஸ்வினி சவாந்த் 435.8 புள்ளிகள் பெற்று 4-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை தவறவிட்டார். ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 12-வது கோட்டா இதுவாகும். 39 வயதான தேஜஸ்வினி சவாந்த் 2010-ம் ஆண்டு நடந்த உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு