விளையாட்டு

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வெற்றி

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வெற்றிபெற்றார்.

தினத்தந்தி

லண்டன்,

டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி.இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 5-ம் நிலை வீரரான டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார். 1 மணி 40 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 5-7, 5-7 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மிடம் தோல்வி அடைந்தார்.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஸ்டெப்னாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 4-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெட்விடேவை சந்தித்தார். 1 மணி 42 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் டேனில் மெட்விடேவை வீழ்த்தினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை