டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலை பாராட்டி நடிகர் தனுஷ் டுவீட்....!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி சாம்பியன் பட்டத்தை ரபேல் நடால் தட்டி சென்றுள்ளார்.

சென்னை,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட் ஆகியோர் விளையாடினர்.

போட்டியின் முடிவில் 6-3, 6-3, 6-0 என்ற புள்ளி கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றுள்ளார். இது நடாலின் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான 14வது வெற்றியாகும். சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலுக்கு நடிகர் தனுஷ் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் ரபேல் நடாலின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...