டென்னிஸ்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா கால்இறுதிக்கு தகுதி

சீன வீராங்கனை கின்வென் செங்கை வீழ்த்தி அஸரென்கா கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

தினத்தந்தி

அடிலெய்டு,

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-2, 7-5 என்ற நேர்செட்டில் சீனாவின் கின்வென் செங்கை விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3-6, 0-6 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் இரின் கெமிலியா பெகுவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். மற்ற ஆட்டங்களில் லின்டா நோஸ்கோவா (செக்குடியரசு), ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்