டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு ஜோகோவிச், செரீனா ஆகியோர் தகுதிபெற்றனர்.

தினத்தந்தி

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் மழை காரணமாக குறைவான ஆட்டங்களே நடந்தன. ஆண்கள் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-6 (7-3), 6-1 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் ஜூவான் இக்னாசியோ லன்டிரோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டாமிர் சும்ஹூரை (போஸ்னியா) விரட்டியடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 37 வயதான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான 17 வயது கேத்ரின் மெக்னாலியை போராடி வீழ்த்தினார். உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6-4, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) வெளியேற்றினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து