டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியுடன் ஆன்டி முர்ரே ஓய்வு பெற முடிவு

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியுடன் ஆன்டி முர்ரே ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

தினத்தந்தி

மெல்போர்ன்,

இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே இடுப்பில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்தும் வலி சரியாகாமல் அவதிப்பட்டு வருகிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே மெல்போர்னில் வருகிற 14-ந் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இந்த நிலையில் 31 வயதான ஆன்டி முர்ரே மெல்போர்னில் நேற்று கண்ணீர் மல்க அளித்த பேட்டியில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறலாம் என்று நினைக்கிறேன். உள்ளூரில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரை விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கடந்த 20 மாதங்களாக வலியால் அவதிப்பட்டு வரும் என்னால் விம்பிள்டன் போட்டி வரை விளையாட முடியும் என்று உறுதியாக கூற முடியாது. ஆஸ்திரேலிய ஓபன் போட்டி தான் எனது கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆன்டி முர்ரே 3 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி இருப்பதுடன், ஒலிம்பிக் போட்டியில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு