லண்டன்,
டென்னிஸ் ஜாம்பவானான லென்டில் ஏற்கனவே 2011 முதல் 2014-ம் ஆண்டு வரை முர்ரேவுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார். பிறகு அவரை விட்டு பிரிந்த லென்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறுபடியும் கைகோர்த்தார்.
அவரது பயிற்சியின் உதவியுடன் விம்பிள்டன் பட்டம், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் ஆகியவற்றை வென்றதுடன், நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து முர்ரே அசத்தினார். ஆனால் காயத்தால் இந்த ஆண்டில் தடுமாறிய ஆன்டி முர்ரே தரவரிசையில் 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து புதிய சீசனை வேறு ஒரு பயிற்சியாளருடன் எதிர்கொள்ள முர்ரே தயாராகி வருகிறார்.