டென்னிஸ்

வூஹான் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சபலென்கா

வூஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

தினத்தந்தி

பீஜிங்,

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வந்தது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 1-6 என இழந்த சபலென்கா அடுத்த இரு சுற்றுகளை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், சகநாட்டு வீராங்கனை வாங் சின்யு உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஜெங் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார். இதில் 6-3, 5-7, 6-3 என்ற கணக்கில் குயின்வென் ஜெங்கை வீழ்த்தி சபலென்கா தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்