டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசை; 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாப் 100க்குள் இடம்பிடித்தார் ஆண்டி முர்ரே!

நெதர்லாந்தின் ரோட்டர்டேம் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு முன்னாள் உலக சாம்பியன் ஆண்டி முர்ரே முன்னேறி உள்ளார்.

தினத்தந்தி

ரோட்டர்டேம்,

நெதர்லாந்தின் ரோட்டர்டேம் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இங்கிலாந்து நாட்டின் ஆன்டி முர்ரே, உலக டென்னிஸ் தரவரிசையில் 31ம் நிலை வீரராக உள்ள கஜகஸ்தான் நாட்டின் அலெக்சாண்டர் பூப்ளிக் உடன் மோதினார். இந்த போட்டியில், அவர் 7-6 (8/6), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பூப்ளிக்கை தோற்கடித்தார்.

இதன்மூலம் ரோட்டர்டேம் டென்னிஸ் தொடரின் 2வது சுற்று ஆட்டத்திற்கும் அவர் தகுதி பெற்றார்.

மேலும், உலக டென்னிஸ் தரவரிசையில் 2018ம் ஆண்டுக்கு பின், முதன் முறையாக டாப் 100 இடத்துக்குள் வந்துள்ளார். தற்போது அவர் டென்னிஸ் தரவரிசையில் 95வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

அவர் அடுத்த போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரான கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை எதிர்கொள்ள உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை