மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்றைய ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் மற்றும் அமெரிக்காவின் மேக்சிம் கிரெஸ்சி ஆகியோர் விளையாடினர்.
3 மணிநேரம் மற்றும் 30 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், 6-2, 7-6(4), 6-7(4), 7-5 என்ற செட் கணக்கில் போராடி கிரெஸ்சியை, மெட்வடேவ் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள மெட்வடேவ், கனடா நாட்டின் பெலிக்ஸ் ஆகரை எதிர்கொள்ள இருக்கிறார்.