மெல்போர்ன்,
ஆஸ்திரேலியா நாட்டில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நடப்பு சாம்பியனான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிக் மற்றும் பிரான்சை சேர்ந்த ஜெரேமி சார்டி ஆகியோர் முதல் சுற்றில் விளையாடினர்.
91 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்தே சிறப்புடன் விளையாடிய ஜோகோவிக் 6-3, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் சார்டியை வீழ்த்தி போட்டியில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டயாபோ உடன் 2வது சுற்றில் ஜோகோவிக் விளையாடுகிறார். இன்று நடந்த மகளிர் பிரிவு போட்டியில், நவாமி ஒசாகா மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.