image courtesy; PTI  
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்; கரோலின் வோஸ்னியாக்கி வெற்றி

இந்த வெற்றியின் மூலம் கரோலின் வோஸ்னியாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மாண்ட்ரியல்,

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான டென்மார்க்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிம்பெர்லி பிர்ரெல் உடன் மோதினார்.

இந்த போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பின் ஓய்வு முடிவில் இருந்து களத்திற்கு திரும்பிய வோஸ்னியாக்கி எளிதில் வெற்றி பெற்றார். 1 மணிநேரம் 37 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் வோஸ்னியாக்கி 6-2 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் கிம்பெர்லி பிர்ரெலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அவர் 2-வது சுற்று போட்டியில் விம்பிள்டன் சாம்பியனான மார்கெட்டா வோன்ட்ரோசோவா உடன் விளையாட உள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்