image courtesy: PTI  
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்

முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), லாத்வியாவின் அனஸ்டாசிஜா செவஸ்டோவா உடன் மோதினார்.

டொராண்டோ,

கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), லாத்வியாவின் அனஸ்டாசிஜா செவஸ்டோவா உடன் மோதினார்.

இந்த மோதலில் அனுபவம் வாய்ந்த ஒசாகா தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அனஸ்டாசிஜா செவஸ்டோவாவை வீழ்த்தி நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேறினார்.