image courtesy; AFP  
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்; ஸ்வரெவ், சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டி நடைபெறுகிறது.

தினத்தந்தி

மாண்ட்ரியல்,

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர்  கடந்த 5-ம் தேதி தொடங்கி வரும் 13-ம் தேதி முடிவடைய உள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் டென்னிஸ் தரவரிசையில் 13-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரெவ், ஸ்பெயின் வீரர் புகினோ உடன் மோதினார். இதில் புகினோ 6-1, 6-2 என்ற நேர் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் மான்பில்சுடன் மோதினார். இதில் மான்பில்ஸ் 6-4, 6-3 என்ற நேர் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். முன்னணி வீரரான  சிட்சிபாஸ் 2- வது சுற்றுடன் வெளியேறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்