Image Tweeted By WTA 
டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கார்சியா

இறுதி போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா- பிரான்சின் கரோலின் கார்சியா பலப்பரீட்சை நடத்தினர்.

தினத்தந்தி

டெக்சாஸ்,

டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் பிரான்சின் கரோலின் கார்சியா பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் கரோலின் கார்சியா 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். 29 வயதான கரோலின் கார்சியா டபிள்யூ.டி.ஏ. பட்டத்தை வென்ற இரண்டாவது பிரான்ஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் 2005 ஆம் ஆண்டு அமேலி மௌர்செமோ (பிரான்ஸ்) இந்த பட்டத்தை வென்று இருந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்