டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வீனசை வீழ்த்தி பட்டம் வென்றார் வோஸ்னியாக்கி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வோஸ்னியாக்கி பட்டம் வென்றார்.

சிங்கப்பூர்,

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதியில் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 76 (9), 63 என்ற நேர் செட்டில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரை இறுதியில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 67 (3), 62, 63 என்ற செட் கணக்கில் பிரான்சின் கரோலின் கார்சியாவை போராடி வீழ்த்தினார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் வீனஸ்வோஸ்னியாக்கி இன்று மோதினர்.

இந்த போட்டியில் அமெரிக்காவின் வீனசை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கரோலின் வோஸ்னியாக்கி பட்டம் வென்றுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு