டென்னிஸ்

சேலஞ்சர் டென்னிஸ் லியாண்டர் பெயஸ்-புரவ் ராஜா ஜோடி ‘சாம்பியன்’

சேலஞ்சர் டென்னிஸ் லியாண்டர் பெயஸ்-புரவ் ராஜா ஜோடி கைப்பற்றிய முதல் ‘சாம்பியன்’ பட்டம் ஆகும்.

நோஸ்விலே,

ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள நோஸ்விலேவில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-புரவ் ராஜா ஜோடி, ஜேம்ஸ் செர்ராடானி (அமெரிக்கா)-ஜான் பாட்ரிக் சுமித் (ஆஸ்திரேலியா) இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்-புரவ் ராஜா இணை 7-6 (7-4), 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஜேம்ஸ் செர்ராடானி-ஜான் பாட்ரிக் சுமித் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் புரவ் ராஜாவுடன் இணைந்த பிறகு லியாண்டர் பெயஸ் கைப்பற்றிய முதல் பட்டம் இதுவாகும்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...