சென்னை,
சென்னை ஓபன் ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம் பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் முகுந்த் சசிகுமார்- இங்கிலாந்தின் ஜெய் கிளார்க் ஜோடி 7-6(7), 4-6, 13-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் பெலிக்ஸ் கில்-கிரே இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் கலியந்தா பூனச்சா- தாய்லாந்தின் புருசியா இசரோ இணை 6-4, 6-1 என்ற நேர் செட்டில் இந்தியாவின் பிரஜ் வால் தேவ்- நிதின்குமார் சின்ஹா இணையை வெளியேற்றி இறுதி சுற்றை எட்டியது.