டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: புருவிர்தோவா அதிர்ச்சி தோல்வி

லின்டா புருவிர்தோவா , இந்தோனேசியாவின் ஜேனிஸ் டிஜெனை எதிர்கொண்டார்.

தினத்தந்தி

சென்னை,

2-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), இந்தோனேசியாவின் ஜேனிஸ் டிஜெனை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜேனிஸ் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் புருவிர்தோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதே போல் இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிதிபதி 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் கிம்பெர்லி பிரெலிடம் (ஆஸ்திரேலியா) தோல்வியடைந்தார் . 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை