Image Courtesy: Twitter @EmmaRaducanu 
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: எம்மா ராடுகானு, இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

எம்மா ராடுகானு 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவை எதிர்கொண்டார்.

தினத்தந்தி

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இங்கிலாந்து இளம் வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி பெற்று இருந்தார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் அவர் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் எம்மா ராடுகானு 6-0 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ரவுண்ட் ஆப் 32 சுற்றின் மற்றொரு போட்டியில் ஸ்லோன் ஸ்டீபன்ஸை 6-4 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்