image courtesy:twitter/@CincyTennis 
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பாதியில் விலகிய சினெர்.. சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

தினத்தந்தி

சின்சினாட்டி,

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள ஜானிக் சினெர் (இத்தாலி) - 2-வது இடத்தில் உள்ள கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சினெர் மேற்கொண்டு விளையாடாமல் விலகினார்.

இதனையடுத்து அல்காரஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அத்துடன் சாம்பியன் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து