டென்னிஸ்

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரஷியாவின் டேனில் மெட்விடேவ் தகுதி பெற்றுள்ளார்.

தினத்தந்தி

துரின்,

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. தரவரிசையில் டாப்-8 இடங்களில் இருக்கும் வீரர்கள் 'ரெட்' மற்றும் 'கிரீன்' என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அரைஇறுதிக்கான லீக் ஆட்டத்தில் விளையாடினர். பின்னர் ரவுண்ட்-ராபின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-4. 6-2 என்ற நேர் செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை (நார்வே) வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை