புதுடெல்லி,
இந்த போட்டிக்கான இந்திய அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் நேற்று இறுதி செய்துள்ளது. வெளியில் இருந்து அணியை வழிநடத்தும் விளையாடாத கேப்டன் ரோகித் ராஜ்பால் தலைமையிலான இந்திய அணியில் லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா (இருவரும் இரட்டையர் ஆட்டம்), சுமித் நாகல், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் (மூவரும் ஒற்றையர் ஆட்டம்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரராக திவிஜ் சரண் அணியினருடன் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.