டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில்இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஜாக்ரெப்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-குரோஷியா இடையிலான ஆட்டம் ஜாக்ரெப் நகரில் நடந்தது. இதில் ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்தனர். இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- ரோகன் போண்ணா ஜோடி போராடி வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் குரோஷியாவின் மரின் சிலிச் 6-0, 6-1 என்ற நேர் செட்டில் இந்திய வீரர் சுமித் நாகலை ஊதித்தள்ளினார். இதனால் குரோஷியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால் கடைசி ஆட்டம் தேவையில்லாமல் போனது. இந்த வெற்றியின் மூலம் குரோஷியா டேவிஸ் கோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்து உலக குரூப்1 சுற்றில் விளையாடும்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு