டென்னிஸ்

இந்திய வீரரிடம் டோம்னிக் தெய்ம் அதிர்ச்சி தோல்வி

அண்டால்யா ஓபன் டென்னிஸில் இந்தியாவின் ராம்குமாரிடம் டோம்னிக் தெய்ம் அதிர்ச்சி தோல்வி.

அண்டால்யா,

அண்டால்யா ஓபன் டென்னிஸ் போட்டிகள் துருக்கியின் அண்டால்யா நகரில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதனும் ஆஸ்ட்ரியாவின் டோம்னிக் தெய்மும் மோதினர். ராம்குமார் அமிரக ஏடிபி தரவரிசையில் 222வது இடத்திலும் டோம்னிக் 8வது இடத்திலும் உள்ளனர்.

டோம்னிக் கடந்த மாதம் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் காலிறுதியில் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு மணி நேரத்திற்குள் டோம்னிக்கை 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறினார் ராம்குமார். இதில் பத்து ஏஸ்களும் அடங்கும்.

அடுத்ததாக நடைபெற உள்ள காலிறுதி போட்டியில் ராமநாதன் சிப்ரஸின் மார்கோஸ் பாக்தாத்திஸை எதிர்கொள்கிறார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...