துபாய்,
துபாய் ஓபன் சர்வதேச டென்னிசின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 7-ம் நிலை வீரரான ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் செக் குடியரசின் ஜிரி வெஸ்லியை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் ஆந்த்ரே ரூப்லெவ் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஜிரி வெஸ்லியை வீழ்த்தி மகுடம் சூடினார். மேலும் அவருக்கு சுமார் ரூ.4 கோடி பரிசுத்தொகையும் கிடைத்தது.
இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கால்இறுதி சுற்றுடன் தோழ்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.