டென்னிஸ்

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அனிசிமோவா காலிறுதிக்கு முன்னேற்றம்

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 6-1 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜென்னை வீழ்த்தி அமண்டா காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

துபாய்

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் நாட்டில் நடந்து வரும் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் 24 வயதுடைய அமண்டா அனிசிமோவா, வீராங்களை ஜேனிஸ் ஜென்னை எதிர்த்து விளையாடினார்.

இதில், முதல் செட்டில் 6-1 என்ற புள்ளி கணக்கில் எளிதில் அமண்டா கைப்பற்றினார். எனினும், உலக தர வரிசையில் 46-வது இடம் வகிக்க கூடிய ஜென், அடுத்த செட்டில் 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார். ஆனால், உஷாராக விளையாடிய அமண்டா அடுத்தடுத்து திறமையாக விளையாடி அந்த செட்டையும் கைப்பற்றினார்.

இதனால், போட்டியில், 6-1 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜென்னை வீழ்த்தி அமண்டா காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

SCROLL FOR NEXT