Image Tweeted By @EmmaRaducanu 
டென்னிஸ்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இளம் வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி

முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ், இங்கிலாந்து இளம் வீராங்கனை எம்மா ராடுகானுவை (19 வயது) எதிர்கொண்டார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் ஓஹியோவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்று ஒன்றில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (40 வயது) இங்கிலாந்து இளம் வீராங்கனை எம்மா ராடுகானு (19 வயது) மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய எம்மா ராடுகானு 6-4, 6-0 செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். வெற்றிக்கு பிறகு பேசிய ராடுகானு, செரீனா போன்ற வீராங்கனையை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றது பெருமை அளிப்பதாக கூறினார். அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னதாக இந்த வெற்றி தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும் என அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...