பாரிஸ்,
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் உக்ரைனிய வீராங்கனை மார்டா கோஸ்ட்யுக் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் கால்இறுதிப் போட்டியில், 15-வது தரவரிசையில் உள்ள மார்டா கோஸ்ட்யுக், 7-வது தரவரிசையில் இருந்த சக நாட்டு வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் உக்ரைனிய வீராங்கனை என்ற பெருமையை கோஸ்ட்யுக் பெற்றுள்ளார்.
அடுத்து நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், கோஸ்ட்யுக் 8-வது தரவரிசை வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவாவை எதிர்கொள்கிறார்.
தற்போதைய பார்மும், தொடர்ச்சியான வெற்றிகளும் கோஸ்ட்யுக்கிற்கு நம்பிக்கையளித்தாலும், இளம் நட்சத்திரமான ஆண்ட்ரீவாவுக்கு எதிரான இந்த மோதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.