Image Courtesy : AFP  
டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : டேனியல் மெட்வதேவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மெட்வதேவ் 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பாக்னிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

பாரிஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் தொடங்கியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வதேவ் , தரவரிசையில் 103வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் ஃபகுண்டோ பாக்னிஸை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெட்வதேவ் 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பாக்னிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்