பாரீஸ்,
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் சாண்ட்கிரென் ஆகியோர் மோதினர்.
தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அனுபவ வீரரான ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் சாண்ட்கிரெனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து இரண்டாவது சுற்றில் ஜோகோவிச், உருகுவே வீரர் பாப்லோ குவாசுடன் மோத உள்ளார்.