டென்னிஸ்

சான் ஜோஸ் டென்னிஸ் போட்டி: காயம் காரணமாக முகுருஜா விலகல்

சான்ஜோஸ் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக முன்ணனி வீராங்கனையான முகுருஜா விலகினார். #GarbineMuguruza

தினத்தந்தி

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் சான் ஜோஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் காயம் காரணமாக ஸ்பெயினின் முன்ணனி வீராங்கனை முகுருஜா வெளியேறினார்.

முன்னதாக 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றிலே வெளியேறி அதிர்ச்சியளித்தார். மேலும் விக்டோரியா அசரென்கா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இந்நிலையில் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான கார்பைன் முகுருஜா, விம்பிள்டன் இரண்டாம் சுற்றில் வெளியேறிய நிலையில் சான் ஜோஸ் போட்டியின் மூலம் மீண்டும் களமிறங்கினார். ஆனால் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து முகுருஜா கூறுகையில், கடந்த சில நாட்களாக என் வலது கையில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. போட்டியில் விளையாட தயாராக இல்லை என்பதை என்னால் உணர முடிகிறது, அடுத்த நடக்க உள்ள போட்டிகளுக்காக விரைவில் குணமடைவேன், "என்று கூறினார்.

முகுருஜாவுக்கு பதிலாக ரஷியாவின் அன்னா பிளின்கோவா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை