டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒன்றையர் பிரிவு இறுதிப் போட்டி லண்டனில் இன்று நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சும், தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவும் இன்று கோதாவில் இறங்குகினார்கள்.

இறுதிப் போட்டியில் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை 7-5, 6-0 என்ற நேர் செட்களில் முகுருஜா வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

முகுருஜா வெல்லும் 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டம் வென்ற முகுருஜாவிற்கு பரிசுத்தொகையாக ரூ.18 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.