டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஹாலெப், அஸரென்கா எளிதில் வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹாலெப், அஸரென்கா ஆகிய முன்னணி வீராங்கனைகள் முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றனர்.

தினத்தந்தி

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் டேவிட் கோபின் (பெல்ஜியம்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 74-ம் நிலை வீரர் 19 வயதான ஜானிக் சின்னெர் (இத்தாலி) 7-5, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-1, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரேவை (இங்கிலாந்து) விரட்டினார். நிஷிகோரி (ஜப்பான்), ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), சாரா சோரிப்ஸ் டோர்மோவை (ஸ்பெயின்) புதிதாக மேற்கூரை அமைக்கப்பட்ட களத்தில் எதிர்கொண்டார். தொடக்கத்தில் 2-4 என்று பின்தங்கிய ஹாலெப் அதன் பிறகு தொடர்ச்சியாக 10 கேம்களை வசப்படுத்தி அசத்தினார். முடிவில் ஹாலெப் 6-4, 6-0 என்ற நேர் செட்டில் சோரிப்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும். ஹாலெப் நேற்று தனது 29-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி அமைந்தது.

இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) தன்னை எதிர்த்த டான்கா கோவினிச்சை (மோன்ட்னெக்ரோ) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் பந்தாடினார். எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), மரியா சக்காரி (கிரீஸ்), கனேபி (எஸ்தோனியா) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

அதே சமயம் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-6, 4-6 என்ற நேர் செட்டில் கரோலினா ஸ்கிமிட்லோவாவிடம் (சுலோவக்கியா) வீழ்ந்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு