உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி சில தினங்களுக்கு முன்பு தனது 25 வயதிலேயே டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அடுத்த நம்பர் ஒன் வீராங்கனை யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நம்பர் ஒன் அந்தஸ்தை போலந்தின் இகா ஸ்வியாடெக் எட்டியுள்ளார். இதுவரை 2-வது இடத்தில் இருந்த அவர் அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி டென்னிசில் 2-வது சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் நம்பர் ஒன் இடத்திற்கு தகுதியுடையவராக மாறியிருக்கிறார்.
முதலிடத்தை பிடித்த முதல் போலந்து நாட்டவர் என்ற சாதனையை படைத்திருக்கும் 20 வயதான ஸ்வியாடெக், இந்த நிலையை எட்டுவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. உண்மையில் இதை நம்பவே முடியவில்லை என்று கூறி உணர்ச்சிவசப்பட்டார்.