Image Courtesy : AFP 
டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: மெட்வடேவ்விற்கு அதிர்ச்சி அளித்த மோன்பில்ஸ்!

இந்தத் தோல்வியால் உலகின் முதல் நிலை வீரரான டேனியல் மெட்வெடேவின் மூன்று வார நம்பர் ஒன் பயணம் முடிவுக்கு வந்தது.

இண்டியன்வெல்ஸ்,

பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் நட்சத்திமான ரஷியாவின் டேனியல் மெட்வெடே, பிரான்சின் 26ம் நிலை வீரரான மோன்பில்சை எதிர்கொண்டார்.

இதில் மோன்பில்ஸ், மெட்வெடேவை 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் இரண்டு மணி நேரத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்து நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

35 வயதான மோன்பில்ஸ், 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.