Image Courtesy: AFP  
டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கார்லஸ் அல்காரஸ்

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

கலிபோர்னியா,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் மற்றும் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய சின்னெர், அடுத்த செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார்.

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளானது. ஆனால் இந்த செட்டில் ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-2 என்ற புள்ளிக்கணக்கில் சின்னெரை வீழ்த்தினார்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெரை வீழ்த்தி ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்