டென்னிஸ்

சர்வதேச டென்னிஸ்: அரைஇறுதியில் சானியா ஜோடி தோல்வி

சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் சானியா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி- ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன் மோதியது.

1 மணி 5 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா - நாடியா கிச்னோக் இணை 1-6, 6-2, 8-10 என்ற செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி- ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியிடம் வீழ்ந்து வெளியேறியது.

இதேபோல் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் கூட்டணி 6-1, 6-3 என்ற நேர்செட்டில் பெஞ்சமின் போன்ஜி (பிரான்ஸ்)-ஹூகோ நிஸ் (மொனாக்கோ) ஜோடியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.

அரைஇறுதியில் போபண்ணா-ராம்குமார் ஜோடி, டாமிஸ்வாவ் பிர்கிச் (போஸ்னியா) - சான்டியாகோ கோன்ஸலேஸ் (மெக்சிகோ) இணையை எதிர்கொள்கிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை