அடிலெய்டு,
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா கிச்னோக் கூட்டணி அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸ் -இங்கிலாந்தின் ஹீதர் வாட்சன் இணையுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா - நாடியா கிச்னோக் கூட்டணி 6-0, 1-6, 10-5 என்ற செட் கணக்கில் ஷெல்பி ரோஜர்ஸ் - ஹீதர் வாட்சன் இணையை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. சானியா மிர்சா ஜோடி அடுத்து ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி-ஸ்டோர்ம் சான்டெர்ஸ் இணையை எதிர்கொள்கிறது.